Shadow

Tag: Miral movie

மிரள் விமர்சனம்

மிரள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதற்பாதியில், கதைக்கான அடித்தளத்தை அமானுஷ்யமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல். பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு, அமானுஷ்யமான கனவுகள் துரத்தியவண்ணம் உள்ளன. அந்தக் கனவுகளில் இருந்து, தன் மனைவியை மீட்க வழி தெரியமல் தவிக்கிறார் பரத். 'குலதெய்வம் கோயிலுக்குப் போய் படையல் இட்டால் எல்லாம் சரியாகும்' என பரத்தின் மாமியார் மீரா கிருஷ்ணன் சொல்ல, பரத் தன் மனைவி மற்றும் மகனுடன் கிராமத்திற்குக் கிளம்புகிறார். கிராமத்தில் இருந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் வழியில், அத்துவானக் காட்டில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறார். அவரைச் சூழ்ந்து நெருக்கும் அமானுஷ்ய இடரில் இருந்து பரத்தால், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. காட்சிகளுக்கு அளித்த கவனத்தை வசனத்திற்கு அளிக்கத் தவறியுள்ளனர். ஹாரர் படத்திற்கான க்ரிப்பிங்கான முதற்பாதியாக இல...
மலேசியாவில் ‘மிரள்’ படம்

மலேசியாவில் ‘மிரள்’ படம்

திரைத் துளி
ஆக்செஸ் ஃப்லிம் ஃபேக்டரி G. டில்லி பாபு தயாரிப்பில், M. சக்திவேல் இயக்கத்தில் பரத் - வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் (Sdn. Bhd.) நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்....