32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நேற்று இந்த நேரம் | காணாமல் போன நண்பர்களும், திடுக்கிடும் சம்பவங்களும்

Dinesh R சேலம் Published: 21/03/2024 1 நிமிட வாசிப்பு Updated: 26/03/2024 சினிமா
எழுத்து அளவு:

கிளாப்இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி இயக்கி இருக்கும் த்ரில்லர் திரைப்படம் “நேற்று இந்த நேரம்” ஆகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா மற்றும் சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். க்ரைம் திரில்லர் பாணியில் சுவாரசியமாக திரைக்கதை அமைத்து இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

கெவின்.N இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.ந மேற்கொண்டுள்ளனர். ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பின்னணி வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையிட இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.