
சென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்டை 1993 ஆம் ஆண்டு, பேராசிரியர் அர்ஜுன்தாஸ் தலைமையில் தொடங்கினர். இதன் பிரதான நோக்கம், மேற்படிப்பு படிப்பவர்களுக்கும், நரம்பியல் துறையில் பணி புரிபவர்களுக்கும் துறை சார்ந்த முன்னேற்றத்தை அறிய தந்து உதவுவதுதான். தேசிய மற்றும் சர்வதேச அளவில், CME நிகழ்ச்சிகளை நடத்தி, நியூரோ சயின்ஸ் துறையின் தொடர் முன்னேற்றத்தையும், சமீப சாதனையையும் அதன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள் நவீன கருவிகள் உதவுகிறது நியூரோ ட்ரஸ்ட். கால்கை (காக்காய்) வலிப்பு உடையவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வொர்க்-ஷாப் நடத்தியுள்ளனர். வலிப்பு மற்றும் அடைப்பு குறித்து, சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறைய நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு வருடத்தின் ஜனவரி மாதத்திலும், 300 – 400 நரம்பியல் நிபுணர்கள் ஒன்றாய்க் குழுமி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நிகழ்ந்த CME நிகழ்வுகள் பற்றிய கருத்துப் பரிமாறுதல்களுக்கு வழிவகுக்கும் சந்திப்பினைச் சாத்தியப்படுத்த உதவுகிறது மெட்ராஸ் நியூரோ ட்ரஸ்ட். இவ்வாண்டும் அத்தகைய நிகழ்வினை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதில் இருந்தும், ஸ்பெயின் முதலிய நாடுகளில் இருந்தும் நரம்பியல் துறை வல்லுநர்களை வரவழைத்து மூன்று நாள் கருத்தரங்கை நிகழ்த்தியது.