
அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான ‘நிஷாஞ்சி’ படத்தின் அதிரடி ட்ரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
ஆக்ஷன், டிராமா, ரொமன்ஸ், காமெடி, தாயின் பாசம் என எல்லா சினிமா ரசிகர்களும் விரும்பும் அம்சங்களும் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லரில், அறிமுக நடிகர் ஆயிஷ்வர்ய் தாக்கரே இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பப்லூ மற்றும் டப்லூ எனும் இரட்டை சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இப்படம், அவர்கள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களது குணங்களில் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பதைச் சித்தரிக்கிறது.
ஜார் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஃப்ளிப் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு பிரசூன் மிஸ்ரா, ரஞ்சன் சந்தேல் மற்றும் அனுராக் காஷ்யப் திரைக்கதை எழுதியுள்ளனர். வேதிகா பின்டோ, மோனிகா பன்வார், முகமது ஜீஷான் அய்யூப் மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நிஷாஞ்சி பட ட்ரெய்லர் பார்வையாளர்களை 2000களின் தொடக்கத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் சிறிய நகரங்களுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.
இயக்குநர் அனுராக் காஷ்யப், “நிஷாஞ்சி – பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்திப் படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது. இந்தப் படத்தைத் தயாரிப்பதில் அமேசான் MGM ஸ்டூடியோஸ் எனக்கு முழு நம்பிக்கை கொடுத்தது. ஆயிஷ்வர்ய், வேதிகா, மோனிகா, ஜீஷான், குமுத் என எல்லோரும் கதாபாத்திரங்களாக வாழ்ந்து நடித்தனர். படக்குழுவின் ஒவ்வொருவரும் அதே ஆர்வத்துடன் உழைத்தனர். இசையும் அதே உணர்வைத் சுமந்துள்ளது. பார்வையாளர்கள் இசையையும், படத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
நிஷாஞ்சி திரைப்படம், செப்டம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

