Search

புற்றுநோயியல் 2018

Oncology-2018

மனித இனத்தை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். அந்த நோயை முற்றிலும் குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வில், வருடந்தோறும் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கிச் செல்கிறது மருத்துவ உலகம்.

‘2018 இல், அன்காலஜியில் புதிதாய் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன?’ என்ற தலைப்பில் கருத்தரங்கினை ஒருங்கிணைத்தார் மருத்துவர் அனிதா ரமேஷ். டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னையிலுள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் இந்தக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் பங்கு கொண்டு, இந்தியப் பார்வையில், புற்றுநோயை எப்படி அணுகி சிகிச்சை அளிக்கின்றனர் என்பது பற்றிக் கலந்துரைத்தனர்.

>> உடல் திசு ஆய்வின் மூலம், புற்று நோயைக் கண்டறியும் பழைய வழிக்குப் பதிலாக, ‘லிக்விட் பயாப்ஸி (Liquid Biopsy)’ எனும் முறையில், ரத்தப் பரிசோதனையிலேயே புற்று நோய் அணுக்களைக் கண்டறியலாம்.

>> Next generation DNA Sequencing – Easier to identify 100 to 1000 Genes at the same time

>> Proton Beam (Therapy) – First time in India at Chennai

>> Robotic Surgery – Cytoreductive surgery with hyperthermic intraperitoneal chemotherapy

>> Breast Cancer – Hormone sensitive Ribociclib: A new drug with new mechanisms of actions

>> Lung Cancer – Durvalumab Osimertinib: A new drug with promising results

போன்ற பலதரப்பட்ட தலைப்பில் மருத்துவர்களின் ‘கேஸ் ஸ்டடி’கள் மூலம் விவாதிக்கப்பட்டன.

விரைவில், மருத்துவ உலகம், ஆன்காலஜி எனப்படும் புற்றுநோயியல் துறையில், புற்றுநோயில் இருந்து முற்றிலும் விடுபடும் சிகிச்சை முறையினைக் கண்டடைவார்கள் என்று நம்புவோமாக.!