32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review

Dinesh R சேலம் Published: 17/04/2025 2 நிமிட வாசிப்பு Updated: 18/04/2025 அயல் சினிமா
எழுத்து அளவு:

பேடிங்டன் (2014), பேடிங்டன் 2 (2017) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவது படமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில், பெரு நாட்டைச் சேர்ந்த கரடி ப்ரெளன் குடும்பத்தினரை, லண்டனில் உள்ள பேடிங்டன் இரயில்வே நிலையத்தில் சந்திக்கிறது. எங்குச் சந்தித்தார்களோ, அவ்விடத்தின் பெயரையே கரடிக்கு வைத்துத் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள் ப்ரெளன் குடும்பத்தினர். இரண்டாம் பாகத்தில், ஒரு திருட்டுப் பழி பேடிங்டன் மீது விழ, ப்ரெளன் குடும்பத்தினர் உதவியோடு பழியில் இருந்து தப்பிக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

முதல் பாகத்தில், பேடிங்டனை லண்டனுக்கு அனுப்பி வைத்திருப்பார் அத்தையான லூசி கரடி. இரண்டாம் பாகத்தில், நிரபராதி என விடுவிக்கப்படும் பேடிங்டனைக் காண லண்டன் வந்திருப்பார் லூசி கரடி. இப்பாகத்தில், லூசி கரடி இருக்கும் ஓய்வு இல்லத்தில் இருந்து பேடிங்டனுக்கு ஒரு கடிதம் வருகிறது. கடவுச்சீட்டு வாங்கி பிரிட்டீஷ் குடிமகனாகியிருக்கும் பேடிங்டனுடன், ப்ரெளன் குடும்பத்தினரும் லூசியைப் பார்க்கக் கிளம்புகின்றனர். ஆனால் லூசி, ஓய்வு இல்லத்தில் இருந்து வெளியேறி விடுகிறார். அவர் எங்குச் சென்றிருப்பார் என கிடைத்த துப்புகளின் மூலமாக அவரைத் தேடி பேடிங்டனும், ப்ரெளன் குடும்பத்தினரும் எல் டொராடோவை நோக்கி ஒரு சாகசப் பயணத்திற்குக் கிளம்புகின்றனர்.

அமேசான் நதியும், காடுகளும், மலைகளும், பள்ளத்தாக்குகளும், சிகரங்களும் என படம் இயற்கை எழில் மிகுந்த மெய்நிகர் (Virtual) சுற்றுலா அழைத்துச் செல்கிறது. எரிக் வில்ஸனின் ஒளிப்பதிவில் பெரு நாட்டிற்குக் கோடை சுற்றுலாவிற்குச் சென்று வந்த திருப்தியை விஷுவல்கள் அளிக்கின்றன. ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்ஸிகோ’ படத்து நாயகனான அன்டோனியோ பண்டேராஸ், அமேசான் நதியைக் கடக்க உதவும் ஹன்டர் கபோடாக (Hunter Cabot) நடித்துள்ளார். பேராசை எனும் நோயால் பாதிக்கப்பட்ட அவரது பரம்பரை பற்றிய பின்னணி கதை ரசிக்க வைக்கிறது.

எல் டொராடோ எனும் புராதனத் தங்க நகரம் என்பது உண்மையில் என்ன என்று படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளனர். அதனால்தான் எல் டொராடோவில் பிறந்த பேடிங்டனால் சிறந்த சுவையுடன் கூடிய மர்மலேட் (Marmalade)-ஐச் சமைக்க முடிகிறது என்று முதல் பாகத்துப் படத்திற்கு ஒரு தொடர்பையும் அழகாக ஏற்படுத்தியுள்ளனர்.

முதலிரண்டு பாகங்களைப் பார்க்கவிட்டாலும் கூட, இப்படத்தின் கதையோடு பார்வையாளர்களால் எளிதில் பொருத்திக் கொள்ள இயலும். இயக்குநராக அறிமுகமாகியுள்ள டூகுல் வில்சன் (Dougal Wilson), பேடிங்டனின் பெரு நாட்டுப் பயணத்தின் மூலமாக ஓர் அற்புதமான அனுபவத்தை அளித்துள்ளார். குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு மிகச் சரியான தேர்வு இந்தப் படம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.