32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றிய அரண்மனை 3

Dinesh R சேலம் Published: 15/09/2021 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிப் பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களைத் தொடர்ந்து அரண்மனை 3 படமும் நகைச்சுவைப் பேய்ப் படமாக உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது, அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போது இயக்குநர் சுந்தர்.சி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, கலைஞர் தொலைக்காட்சி CFO S.கார்த்திகேயன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா, Benzz Media CEO R.மதன்குமார் ஆகியோர் இருந்தனர்.

அரண்மனை 3 திரைப்படம், அக்டோபர் 14 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது.

>> கதை, திரைக்கதை, இயக்கம் – சுந்தர்.சி
>> தயாரிப்பு – Avni Cinemax, Benzz Media
>> இசை – C.சத்யா,
>> வசனம் – பத்ரி
>> திரைக்கதை – வெங்கட் ராகவன்
>> ஒளிப்பதிவு – U.K.செந்தில் குமார்
>> படத்தொகுப்பு – பெனி ஆலிவர்
>> கலை – குருராஜ்.P
>> நடனம் – பிருந்தா, தினேஷ்
>> சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்
>> மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது, சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.