32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சந்தோஷ் சிவனின் ‘சென்டிமீட்டர்’

Dinesh R சேலம் Published: 08/05/2022 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்தியேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்களும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.