32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சர்தார் – ப்ரின்ஸ் பிக்சர்ஸின் தரமான சம்பவம்

Dinesh R சேலம் Published: 20/10/2022 1 நிமிட வாசிப்பு Updated: 27/10/2022 இது புதிது
எழுத்து அளவு:

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். அப்படி, தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 அன்று வெளியாகும் சர்தார் படத்தை முற்றிலும் ரசிக்கும்படியாக வழங்கவுள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, வியாபாரத்தில் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது. அதனால் அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“கார்த்தியின் டபுள் ஆக்ஷன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்ஃபுல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களைக் கதையோட்டத்திற்குள் இழுத்துச் செல்லும். ஜீ.வி.பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழுத் திருப்திக்கு நான் கியாரண்டி” என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

“அழகான, தரமான என்டர்டெய்ன்மென்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்குத் தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது” என்றார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.