Shadow

கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்

Makkal Noolagam

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார்.

உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர்.

அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் “மக்கள் நூலக”ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம் நூலகமாக உருவெடுக்கிறது.

மக்கள் நூலகத்தின் சிறப்பம்சங்கள்:

  • இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவி வகிப்பவர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட 25 சிறப்பு வல்லுநர்களின் உதவியோடு தரமான நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  • மாவட்டம் தோறும் பத்து இளைஞர்கள் களப்பணியில் ஈடுபட்டு அரிய நூல்களைச் சேகரிபர்.
  • பராமரிக்க இயலாத தரமான பல நூலகத்தின் நூல்கள் மக்கள் நூலகத்திற்கு ஒப்படைக்கப்படுகிறது.
  • பதிப்பகத்தார் சங்கங்களும் பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது.
  • தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ் ஆராய்ச்சித் துறை பல்வேறு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது.
  • மிகப் பழமையான அரிய நூல்கள் கணினியில் பதிவு செய்து ஆவணப்படுத்தப்படும்.
  • மக்கள் நூலகம் தொடங்கும் போது ஒரு லட்சம் நூல்கள் கொண்ட மிகப் பெரும் நூலகமாகத் தொடங்கப்படும்.
  • தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டி என்ற இடத்தில் உருவாகும் இந்த நூலகத்தை மையமாக வைத்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
  • IAS தொடங்கி TNPSC உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வளாகம் அதிலேயே அமைக்கப்படுகிறது.
  • இந்த நூலகத்தில் இலவச இணையம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து மாணவர்களும் இணையத்தின் வழியில் தங்கள் கல்வி சார்ந்த தேடலுக்கான எளிய வழிகள் உருவாக்கப்படுகிறது.
  • வளரும் இளைய தலைமுறைக்கான விவசாய விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நவீன மற்றும் எளிய முறையில் இயற்கை விவசாய விழிப்புணர்வு அளிக்கப்படும்.
  • பள்ளி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படும்.
  • செவித்திறன் குறைந்தவர்களுக்கு பார்வை மூலம் கல்வியும், பார்வைக் குறைப்பாடு உள்ளவர்களுக்குச் செவித்திறன் மூலம் கல்வியும் வழங்கப்படும்.
  • தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
  • மது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குத் தன்னார்வ தொண்டர்களைக் கொண்டு மறுவாழ்வு அமைத்திட பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • மறைந்து போன பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் பயிற்றுவிக்கப்படும்.
  • பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்.