
கவிஞர் சினேகனின் மக்கள் நூலகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டால், அதில் கிடைக்கும் பரிசுத்தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தைக் கொண்டு அவரது சொந்த கிராமமான தஞ்சை மாவட்டம் புதுக்கரியப்பட்டியிலனைத்து வசதிகளையும் கொண்ட நவீன நூலகம் கட்டுவதாகாறிவித்தார்.
உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் சினேகனின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சினேகன் டைட்டில் வின்னராகத் தேர்வு செய்யப்படாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறுவதற்காகப் பல்வேறு தொண்டு அமைப்புகளும், திரைப்படத் துறையினரும், தொழிலதிபர்களும் முன் வரத் தயாராக உள்லனர்.
அதில் முதல் நபராக நடன இயக்குநரும் நடிகரும் சமூக ஆர்வலருமான திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள், ரூபாய் பத்து லட்சம் நன்கொடையாக சினேகனின் சினேகம் செயலகத்தின் "மக்கள் நூலக"ப் பணிகளுக்காக வழங்கியுள்ளார். இவரின் முழுஒத்துழைப்போடு, சினேகனின் லட்சியம...


