32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

Dinesh R சேலம் Published: 30/03/2018 1 நிமிட வாசிப்பு Updated: 05/06/2018 சினிமா
எழுத்து அளவு:

Justin Prabhakaran

தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும்படத்தில் பணியாற்றினோம்.

தமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ்.ஜே,சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி அநாவசியமோ , இசைக் கலைஞனுக்கும் அப்படியே! காற்றின் தேசம் எங்கும் செல்லும் கானமே ஒரு இசைக் கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன் உவகையோடு.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.