கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம்.
இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, ‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு)’ என்கிற கன்னடப் படத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமீஸ், மணிப்பூரி என பல்வேறு மொழியில், மொத்தம் 20 படங்களில் இருந்து இப்படம் தேரெந்தெடுக்கப்பட்டள்ளது. அல்சீமர்ஸ் நோயால் காணாமல் போகும் தந்தையைத் தேடுவதாக இப்படத்தின் கதை பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கிய, 20வது கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மாண்புமிகு ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் வந்து கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.