Shadow

Tag: அரவிந்த் ராஜகோபால்

அஸ்திரம் விமர்சனம் | Asthram review

அஸ்திரம் விமர்சனம் | Asthram review

சினிமா, திரை விமர்சனம்
அஸ்திரம் என்றால் ஆயுதம் எனப் பொருள்படும். அதுவும் இப்படத்தின் உபதலைப்பான சீக்ரெட் என்பதோடு பொருத்திப் பார்த்தால் 'ரகசிய ஆயுதம்' எனப் பொருள் வரும். ஊட்டியிலுள்ள பூங்காவில் ஒருவர் வயிற்றை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதே பாணியில் நிகழ்ந்த மரணங்களைத் துப்பு துலக்குகிறார் காவல்துறை அதிகாரி அகிலன். மரணித்தவர்கள் அனைத்தும் சதுரங்க விளையாட்டு வீரர்கள் என்ற துப்பினைத் தவிர, அகிலனில் புலனாய்வில் வேறெதுவும் அறிய முடியாமல் போகிறது. பின் ஒரு மருத்துவரின் உதவியோடு தற்கொலைகளுக்குப் பின்னுள்ள சூத்திரதாரியை அறிகின்றார் அகிலன். வில்லன்க்கு மெஸ்மர் எழுதிய 'சீக்ரெட்' எனும் புத்தகம் கிடைக்கிறது. அந்தப் புத்தகத்தின் உதவியால்தான் வில்லன் அசாதாரணமான சக்தியை அடைகிறான். கிட்டத்தட்ட ஏழாம் அறிவு டோங் லீயைப் போல்! மெஸ்மர், ஹிப்னாட்டிஸத்தின் தோற்றுவாய்க்குக் காரணமானவர் என்றாலும், மெஸ்மரிசம் என்பது ஒரு...
என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

என் பெயர் ஆனந்தன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
6 அத்தியாயம் படத்தில், "சித்திரம் கொல்லுதடி" எனும் அத்தியாயத்தை இயக்கிய ஸ்ரீதர் வெங்கடேசனின் தனி முதல் படம். அந்தப் படத்தின் சொல்லிக் கொள்ளும்படியான தனித்துவ முயற்சியாக, அவரது குறும்படம் மட்டும் தனித்துக் கவர்ந்தது. 'அடிமை சுதந்திரம்' எனும் குறும்படத்திற்காக சர்வதேச விருதுகள் பெறும் இயக்குநர் சத்யாவிற்கு, திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்பிடிப்பின் பொழுது, அவரை முகமூடி அணிந்த நபரொருவர் கடத்தி விடுகிறார். யாரால் ஏன் கடத்தப்பட்டார் என்பதுதான் படத்தின் கதை. தெருக்கூத்துக் கலைஞராக அருணும், நாடகக் கலைஞராக அரவிந்த் ராஜகோபாலும் நிறைவாக தன் பங்கினைச் செய்துள்ளனர். ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில், கலைஞர்கள் தங்கள் வயிற்றுப்பாடினைப் பாடும் பாடல் மனதை ஊடுருவித் துளைக்குமளவு அட்டகாசமாக உள்ளது. புருஷோத்தமன் வீரையனின் பாடல்வரிகள் அவ் உணர்வெழுச்சியைத் தான் படம் தந்திருக்கவேண்டும். ஆ...