Shadow

Tag: அர்ஜுனன்

ரிங் ரிங் விமர்சனம்

ரிங் ரிங் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிவாவின் பிறந்தநாள் விழாவிற்கு, அவனது நண்பர்களான தியாகு, கதிர், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தியாகுவும், கதிரும் அவர்களது மனைவியுடன் கலந்து கொள்ள, அர்ஜுன் மட்டும் தனியாகக் கலந்து கொள்கிறான். அனைவரையும் வரவேற்கிறாள் சிவாவின் மனைவி பூஜா வரவேற்கிறாள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தும்போது, கைபேசியில் யார் ரகசியத்தைப் பாதுகாக்கின்றனர் என்ற விவாதம் விளையாட்டாய் நடக்கிறது. அதன் முடிவாக, யாருக்கு எந்தச் செய்தி வந்தாலும் அதை மற்றவர்களுக்குக் காட்டவேண்டும், அழைப்பு வந்தால் அதை லவுட்-ஸ்பீக்கரில் போட்டுப் பேசவேண்டுமென முடிவெடுக்கின்றனர். விளையாட்டு மெல்ல சூடுபிடித்து விபரீதமாவதுதான் படத்தின் கதை.ரஞ்சனியுடன் லிவிங்-டுகெதரில் வாழும் கதிர் எனும் பாத்திரத்தில் டேனியல் ஆன்னி போப் நடித்துள்ளார். ரஞ்சனியாக ஜமுனா நடித்துள்ளார். தன்னைத் தானே நகைச்சுவையாளனாக நினைத்து ஏமாற்றிக் கொள்ளும் அர்...
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

ஆன்‌மிகம்
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற. “பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க. "சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் " என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன். ‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம். கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் பா...