
கிங்ஸ்டன் – பேரலல் யுனிவெர்ஸ் என்றால் என்ன?
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ''இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்குப் பிறகு பின்னணி இசையில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. 'அசுரன்' படத்தினைத் தயாரித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திரு...