Shadow

Tag: ஆரவ்

ராஜபீமா விமர்சனம்

ராஜபீமா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பிக் பாஸ் - சீசன் 1 (2017) வெற்றியாளரான ஆரவ் நாயகனாக நடித்திருக்கும் படம். அவர் பிக் பாஸை விட்டு வெளியானதுமே எடுக்கப்பட்ட படம். படம் தயாராகி சுமார் ஆறு வருடங்கள் ஆகிறது. ஓவியாவுடனான ஆரவின் புகழ்பெற்ற மருத்துவ முத்தம் ரெஃபரென்ஸ் படத்தில் வருகிறது. ஓவியாவும் ஒரு பாட்டுக்கு நடனமாடியுள்ளார். யோகிபாபு இளமையாகக் காணப்படுகிறார்.ராஜா என்பவர் பீமா எனும் யானையை வளர்க்கிறார். முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ராஜாவின் யானைக்குப் பதிலாக, வேறொரு யானையை அவருடையது என முகாம் அதிகாரிகள் சொல்கிறார்கள். பீமாவிற்கு என்னானது, ராஜா எப்படி தன் யானையை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.வனத்துறை அமைச்சரிடம் வேலைக்குச் சேரும் துர்கா பாத்திரத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பீமாவை மீட்க உதவுவதோடு, யானைகளின் தந்தங்களைக் கடத்தும் கும்பலையும் கண்டுபிடிப்பதற்கும் உதவும் கதாபாத்திரம் அவருக்கு. சுரபி திரையரங்கத்...
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

OTT, OTT Movie Review, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷனைக் கதைக்களமாகக் கொண்டு நடக்கும் திரைப்படம். குறைவான லோக்கேஷன்களில், திரைக்கதையை நம்பி விரைவாக எடுத்து முடிக்கப்பட்ட பட்ஜெட் படம் என்பதே இதன் சிறப்பம்சம். இப்படம், ஆஹா ஓடிடி-யில் நேரடியாக வெளியாகிறது. டி பிக்சர்ஸ் சார்பாக, இப்படத்தை எழுதி இயக்கித் தயாரித்துள்ளார் தயாள் பத்மனாபன். சிறந்த இயக்குநருக்கான கர்நாடக அரசின் விருதினை இரண்டு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலையில் இருந்து வரும் ஜெய்குமார், ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறான். அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கிறான். அடுத்த நாள் ஜெய்குமார் இறந்து கிடக்கிறான். பசவண்ணர் அனாதை ஆசிரமத்தில் ஜெய்குமாருடன்  ஒன்றாக வளரும் நண்பர்கள், அவனது மரணத்திற்குப் பழிவாங்க நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் திட்டமிடுவதோடு சரி, அந்தத் திட்டம் தானாக நடக்கிறது. எப்படி எவரால் எனும் சுவ...
கலகத்தலைவன் விமர்சனம்

கலகத்தலைவன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஜ்ரா எனும் பன்னாட்டுப் பெருநிறுவனத்தின் ரகசியங்கள் கசிந்தவண்ணம் உள்ளன. தகவல் கசிவின் பின்னணியில் யார் உள்ளார்கள் என துப்பறிய, அர்ஜுன் எனும் வேட்டையாளைக் களம் இறக்குகிறது வஜ்ரா நிறுவனம். அர்ஜுன் ஒவ்வொரு நூலாகப் பிடித்து திருமாறனிடம் வந்து சேருகிறான். யார் இந்த திருமாறன், ஏன் வஜ்ராவை அழிக்க அவன் போராடுகிறான் என்பதே படத்தின் சுவாரசியமான கதை. வழமை போல் மகிழ் திருமேனியின் மாயம் செய்யும் திரைக்கதை ரசிக்க வைக்கிறது. எட்டு வருடத் திட்டமிடலுக்கான நோக்கம், ஒரு பழி வாங்கும் கதையெனக் கடைசியில் சுருக்கியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாவதன் ஆபத்துகள் குறித்தும், அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் வேலையின்மை குறித்தும் நுணக்கமான விவரணைகளை அளிக்கிறது. அப்படி ஒரு பெரும் பொருளாதாரக் குற்றத்தைப் படம் அம்பலப்படுத்தப் போகிறதோ என்ற தோற்றத்தை எழுப்பி, தனிமனித இ...