Shadow

Tag: ஆர்.வி.உதயகுமார்

கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்‌ஷன் படம்

வெப்பன் – சூப்பர் ஹ்யூமன் ஆக்‌ஷன் படம்

சினிமா, திரைச் செய்தி
குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தொகுப்பாளர் கோபி, “சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டோடு இந்தப் படம் வந்திருக்கிறது. வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாகப் படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில், அடுத்த கட்டத்திற்கான நகர்வாக வெப்பன் படமிருக்கும். வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார். இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்கக் கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாகப் பிரம்மாண்டமாக இருந்தது" என்றார். இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “வி...
“பகலறியான்: இளைஞர்களும் இசையமைப்பாளர்களும்” – பேரரசு

“பகலறியான்: இளைஞர்களும் இசையமைப்பாளர்களும்” – பேரரசு

சினிமா, திரைச் செய்தி
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் விவேக் சரோ, "இது என் முதல் படம். நான் பல டிவி விளம்பரங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப் பெரிய விசயமாகத்தான் இருக்கிறது. இந்தப் படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப் படம் மிக வித்தியாசமானதாக இரு...
”இயக்குநர் பாக்யராஜ் ஆலோசனையின் படி 30 நிமிடத்தை குறைத்திருக்கிறோம்” – சிக்லெட்ஸ் பட இயக்குநர்

”இயக்குநர் பாக்யராஜ் ஆலோசனையின் படி 30 நிமிடத்தை குறைத்திருக்கிறோம்” – சிக்லெட்ஸ் பட இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
'திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்று...
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் 'மார்கழி திங்கள்'  திரைப்படத்தின்  வாயிலாக  நடிகர்  மனோஜ் பாரதிராஜா இயக்குநராக  அறிமுகம்  ஆகிறார்.  இப்படத்தில்  மிகவும்  முக்கியமான  ஒரு கதாபாத்திரத்தில்  'இயக்குநர்  இமயம்'  பாரதிராஜா  நடிக்க,  ஷியாம் செல்வன்,  ரக்ஷனா,  நக்ஷா சரண்  முதன்மை  வேடங்களில்  நடிக்கின்றனர்.இப்படத்திற்காக  31 ஆண்டுகளுக்குப்  பிறகு  பாரதிராஜாவும்  இசைஞானி இளையராஜாவும்  இணைந்துள்ளனர்.  'மார்கழி  திங்கள்'  திரைப்படத்தின் டிரைலர்  மற்றும்  இசை  வெளியீட்டு  விழா  சென்னையில்  நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சியின்  முக்கிய  அம்சங்கள்  வருமாறு:வரவேற்புரை வழங்கிய  சுசீந்திரன்  பேசியதாவது...இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இயக்குந‌ர் இமயம் பாரதிராஜா மற்றும் மனோஜ் பாரதிராஜாவை  ஒன்று  சேர்த்து  படம்  தயாரிப்பது  மிகவும் சந்தோஷமாக  உள்ளது....