திமிரு புடிச்சவன் விமர்சனம்
விஜய் ஆண்டனி முதல் முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். ஆனால், ஒரு போலீஸ் படமாக இல்லாமல், 2018 இல் வந்த மிகச் சிறந்த பக்திப் படமென்ற புகழையே திமிரு புடிச்சவன் பெறும். படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தின் பெயர் முருகவேல். இயக்குநரின் பெயர் கணேஷா. நம்பியார் எனும் படத்தை இயக்கியவர்.
படத்தின் தொடக்கமே கொஞ்சம் அதிர வைக்கிறது. பிளேடைக் கொண்டு மிகக் கொடூரமான கொலை ஒன்றைப் புரிகிறார் விஜய் ஆண்டனியின் தம்பி. தனது தம்பி தான் அந்தக் கொலையைச் செய்தான் என்றும், மேலும் எட்டுக் கொலைகளைச் செய்துள்ளான் என்றும், அடுத்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், ஒரு குழந்தையும் கொலை செய்ய உள்ளான் எனத் தெரிய வருகிறது விஜய் ஆண்டனிக்கு. நீதி, நேர்மை தவறாத நல்லவர், நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைக்கும் உத்தமரான எஸ்.ஐ. முருகவேல்...