Shadow

Tag: இயக்குநர் பாலா

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” – ஜீ5 இணையத் தொடர்

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” – ஜீ5 இணையத் தொடர்

OTT, Web Series
தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் பேசிய இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன், "இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்க...
குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை'க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா. வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் 'கூட்டாஞ்சோறு'. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை "குற்றப்பரம்பரை" எனப் பெயர் மாற்றி 'டிஸ்கவரி புக் பேலஸ்' எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார். அந்நிலையில், "பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்" என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த இய...