
விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’
விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்தியல் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படப்பிடிப்பைப் படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது.
முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன் ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
>> இசை - கண்ணன்
>>...