Shadow

Tag: இயக்குநர் N. ராகவன்

மை டியர் பூதம் விமர்சனம்

மை டியர் பூதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குழந்தைகளுக்கான படம். பிரபு தேவா பூதமாக நடிக்க, பூதத்தை விடுவிக்கும் சிறுவனாக அஷ்வந்த நடித்துள்ளான். அஷ்வந்திற்கு ஒரு விபத்தில் திக்குவாய் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில், சமணர் மலை அருகில் ஒரு பொம்மையில் அடைப்பட்டு இருக்கும் சிலையில் இருந்து கர்கிமுகி எனும் பூதத்தை விடுவிக்கிறான். சாபம் பெற்று பொம்மையாய் மாறிய பூதம், விடுபட்டதிலிருந்து 48வது நாளில், அஷ்வந்த் மந்திரம் சொன்னால் மட்டுமே, பூதத்தால் தன் சொந்த கிரகத்திற்குச் செல்ல முடியும். ஆனால், பூதமே அந்த உதவியை அஷ்வந்திடம் கேட்கக் கூடாது. அஷ்வந்தாகச் செய்யவேண்டும். அதெப்படி சாத்தியமானது என்பதே படத்தின் கதை. குழந்தைகளைக் கவரும் வகையில் வி.எஃப்.எக்ஸில் அசத்தியுள்ளனர் A.M.T. மீடியா டெக். வீஸ்வரூபத்தில் இருக்கும் பூதம், சுவரிலுள்ள சோட்டா பீம் போஸ்டரில் இருந்து லட்டை எடுத்துச் சாப்பிடும் பூதம், டாம் & செர்ர...
குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

குழந்தைகளின் அழகான உலகத்தைக் காட்டும் ‘மை டியர் பூதம்’

சினிமா, திரைத் துளி
அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் P. பிள்ளை தயாரிப்பில் மஞ்சப்பை படப்புகழ் N. ராகவன் இயக்கியுள்ள திரைப்படம் “மை டியர் பூதம்”. தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் குறைவாக உள்ள ஏக்கதைப் போக்கும் விதமாக ஒரு அழகான ஃபேன்டஸி குழந்தைகள் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்தில் பூதமாக இப்படத்தில் நடித்துள்ளார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 15 ஆம் தேதி, இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குநர் N. ராகவன், “என்னுடைய முதல் படம் மஞ்சப்பை ஒரு ஃபீல் குட் டிராமா. அடுத்த படமான கடம்பன் ஆக்சன் டிராமா. எனக்கு எல்லா ஜானரிலும் படம் செய்ய வேண்டும் என்பது ஆசை. அதனால் அடுத்த படம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, குழந்தைகளுக்கான படம் செய்யலாம் எனத் தோன்றியது. தமிழில் குழந்தைகள் உலகைச் சொல்லும் படங்கள் இப்போது அதிகமாக இல்லை. எனவே அதை...