Shadow

Tag: என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். கா...
அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

சினிமா, திரைத் துளி
விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக். மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. ஆனால் மாற்றமில்லாத அதே அன்பு” என்றார் விவேக். என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிரதான கதாபாத்திரங்களைப் பற்றி, “அன்று துடிப்பான காதல் மன்னன். இன்று பொறுப்பான காவல் மன்னன். ஆனால் என்றும் அவரெனக்கு நண்பர். இனிமை, பெண்மை – திரிஷா. அழகு, அறிவு – அனுஷ்கா. ஒரு சீரியசான, குசும்புமிக்க கதா...
அஜித் சார்ன்னா பாசிடிவ்

அஜித் சார்ன்னா பாசிடிவ்

சினிமா, திரைத் துளி
எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன். “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளைச் சேர்த்து மாற்றியதும் பாடல் பதிவு செய்யப்பட்டது.” கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்திச் செல்லும். இப்பாட்டு ஒரு குத்துப் பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜித் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு '...
அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர். அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார். “காலம் என்னைக் கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ்ப்படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.” அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண...
சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் என்னை அறிந்தால்.. படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய். கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார் அருண் விஜய். அப்படி உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதை தான் மிகவும் விரும்புவதாக கூறும் அருண் விஜய், “ஷூட்டிங் நாட்களிலும், இரவு ஜிம்க்கு வந்து என் பெர்ஸனல் ட்ரெயினர் ஷிவக்குமாரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது” என்கிறார்....