Shadow

Tag: எவரெஸ்ட்

எவரெஸ்ட் 3டி விமர்சனம்

எவரெஸ்ட் 3டி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Everest 3D) 1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம். ‘அட்வென்ட்சர் கன்சல்டன்ட்ஸ் (Adventure Consultants)’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் காட்டி முதுகு தண்டைச் சில்லிட வைத்துள்ளார் இயக்குநர் பல்டசர் கொர்மக்குர். குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் நடித்துள்ளார். இவர், போன வருடம் வெளிவந்த ‘டான் ஆஃப் த ப்ளேனட் ஆஃப் த ஏப்ஸ்’ படத்தில் நாயகன் சீஸரைக் கண்டு வியக்கும் மால்கமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருவரையும் எவரெஸ்ட் சிகரத்திலேற்றி, அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்கும் பொறுப்பான வழிகாட்டியாக உள்ளார். குழுவில் இருந்து, மிகவும் பின் த...