Shadow

Tag: ஒரு குப்பைக் கதை

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

ஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம்

சினிமா, திரைச் செய்தி
‘ஆடுகளம்’ படத்திற்குத் தேசிய விருதை வென்ற டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “ஒரு குப்பைக் கதை” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வழக்கு எண் மனிஷா நடித்துள்ளார். பாகன் படத்தின் இயக்குநரான அஸ்லம், தன்னிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த காளி ரங்கசாமியை இயக்குநராக அறிமுகம் செய்து, இப்படத்தைத் தயாரித்துள்ளார். ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் மூலம், மே 25 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். மே 16 அன்று, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாகத் தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வர...