
ஒ காதல் கண்மணி விமர்சனம்
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின் கூட்டணி எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பில் எண்ணெயும் ஊற்றியது படத்தின் ட்ரைலர்.
கல்யாணத்தில் விருப்பமில்லாமல் வாழும் காதலர்கள் ஆதியும் தாராவும். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.
இளமை, காதல், மகிழ்ச்சி, காமம் என முழப் படமுமே கொண்டாட்டமாக உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை படம் நெடுக்கக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ரஹ்மானின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு பி.சி.ஸ்ரீராமின் ஃப்ரேம்களையும் பாடல் காட்சிகளில் துள்ள வைத்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். இந்தத் திறமையாளர்களின் சங்கமம் செய்துள்ள மேஜிக், திரையில் விஷூவல் விருந்தாக ரசிகர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது.
எந்த அடுக்குகளும் சிக்கிலுமில்லாத கதையை எடுத்து தனக்கே உரித்தான அழகியலோடு எளிமையாக திரைக்கதை அமைத்துள்ளார் ...