Shadow

Tag: கண்ணகி 1942

கண்ணகி (1942)

கண்ணகி (1942)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்) ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம். ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித...