
குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்
பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை.
டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.
சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நீதிபதி திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தாலம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதி ஹேமலதா போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்தைக் கண்டு வியந்து போனார்கள்.
நடிகை சுலக்ஷனா பேசுகையில், "சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன். மதுமிதா மேடையில் ஆடும் போது தானாக எனது கால்க...