குற்றம் கடிதல் விமர்சனம்
62ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் வகுப்பு மாணவண் ஒருவனை ஆசிரியை அறைந்து விடுகிறார். அம்மாணவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. பின் என்னானது என்று பரபரப்பாகச் செல்கிறது படத்தின் கதை.
வழக்கமான சினிமாவிலிருந்து வழுவி ஒரு சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு படமெடுத்துள்ளார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து, ஓர் ‘அறை’யில் தொடங்கும் படம் அசுர வேகமெடுக்கிறது. அங்குத் தொடங்கும் பதற்றத்தை, கடைசி நொடி வரை அவரது திரைக்கதை தக்க வைக்கிறது.
பாலியல் கல்வியின் அவசியம் குறித்த முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. ஆனால் படம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், ‘ஆசிரியர் மாணவர்களை அடிக்கலாமா கூடாதா?’ என்று விவாதத்துக்குள் நுழைகிறது. விறுவிறுப்பை கடைசி வரை தக்க வைக்க இந்த விவாதம் உபயோகிக்கப்பட்டாலும், “பாம்புக்க...