Shadow

Tag: கோபிநாதன்

ஐங்கரன் விமர்சனம்

ஐங்கரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாடு நலம்பெற எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது ஐங்கரன் திரைப்படம். 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தற்போது படம் திரைகாணுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் என்ஜினியரீங் மாணவரான ஜீ.வி.பிரகாஷ், மக்களுக்குத் தேவையானதை விஞ்ஞான ரீதியாக பயன்படும் வகையில் சின்ன சின்னதாகச் சாதனங்களைச் செய்கிறார். அதற்கான அங்கீகாரத்திற்கு அலையோ அலை என அலைகிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் சோர்வான ஜீவிக்கு மிக முக்கியமான வாய்ப்பு ஓர் உணர்ச்சிகரமான சம்பவம் மூலமாக வருகிறது. அதைத் தக்கவைத்துக் கொண்டாரா என்ற கேள்விக்கான பதிலைச் சுவாரசியமாக திரையில் காணலாம். இந்த விஞ்ஞான என்ஜினியர் நாயகனையும், வடநாட்டுக் கொள்ளை லீடராக வரும் சித்தார்த் சங்கரையும், அவரது குழுவையும் ஒரு பிரச்சனையோடு இணைத்த விதம் சிறப்...
எட்டுத்திக்கும் பற விமர்சனம்

எட்டுத்திக்கும் பற விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா. திரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ,  இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது. வயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்கு...
என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

சினிமா, திரைச் செய்தி
ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த 'என்னோடு விளையாடு' திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் 'ஸ்டலிஷான லவ்' படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், 'வழக்கு எண்:18/9', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், 'தனி ஒருவன்' போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார். படத்தில், பரத் - கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு ஜோடியாக சாந்தினி தமிழரசனும், கதிருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். காதல் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் மோசஸும், சேஸிங் போன்ற மற்ற ஜானர் பாடல்களை 'பர்மா' படத்தின் இசையமைப்பாளர் சுதர்ஷன் M.குமாரும் மெட்டமைத்துள்ளனர். 'ஒரு சின்ன பிரேக் இருந்தால் நல்லாயிருக்கும்' என ஒன்பது மாதங்கள் இடைவெளி விட்ட பின், மிக ...
றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த 'மாஸ் ஹீரோ' படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன். கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். 'வாவ்.. வாட் எ மேன்!' எ...