Shadow

Tag: சக்திவேலன்

“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

“விக்ரம்: தங்கலானின் ஜீவன்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்

சினிமா, திரைச் செய்தி
ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினைத் தங்கலான் படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர். இந்நிகழ்வில் பேசிய விநியோகஸ்தர் சக்தி வேலன், ''தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்குக் கடினமான காலகட்டமாக இருந்தது. இருந்தாலும் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்து, இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அதன் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன் முழுமை அடையாத முதல் பிரதியை அவர் காண்கிறார். அந்தத் தருணத்தில் என்னையும் அழைத்து இருந்தார். படத்தை முழுமையாகப் பார்த்த பிறகு, பத்து நிமிடம் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார். அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என எனக்குத் தெரியவில்லை. அவருடைய பார்வை என்னவென்று தெரிந்து கொண்டு பேசலாம் என்ற...
“ஜீவி பிரகாஷ் அண்ணா தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார்” – அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ்.

“ஜீவி பிரகாஷ் அண்ணா தமிழுக்கான கதையில் நான் நடிக்கிறேன் என்று வந்தார்” – அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ்.

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன் பேசியதாவது... ரெபெல் திரைப்படம் இயக்குநர் நிகேஷ் உடைய ஒரு கனவு. இந்திய சினிமாவின் ரெபெல் ஜீவியை வைத்து ஒரு அருமையான படத்தைத் தந்துள்ளார். ஜீவி மிகப்பெரிய போராளி, தொடர்ந்து இசை, நடிப்பு என அவரது சுறுசுறுப்பு உழைப்பு, அர்ப்பணிப்பு அளப்பரியது. இப்படத்திற்கு அவர் தந்த உழைப்பு மி...
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வ...
மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ராஜ்கிரண், “இந்தப் படம் மூலமாக 2-டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படமாக இந்த ‘விருமன்’ படத்திலும் கொடுத்ததற்கு நன்றி. 2டி நிறுவனம் படத்தயாரிப்பினை ஒரு கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத...