Shadow

Tag: சிவாஜி கணேசன்

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு. கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது. வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் திரிபைக் கணக்கில் எடுக்காமல், படத்தின் கதையை சக்தி கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புதினமாகப் பாவித்தால் படம் மகத்தான காவியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன், ஆயிரத்தின் ஒருவன் போல் இப்படம் தொடக்கம் முதல் கடைசி வரை ஈர்க்கவில்லை. காரணம், படம் ஒற்றை கருவை நோக்கமாகக் கொண்டு பயணி...
முதல் இந்திய நடிகர்

முதல் இந்திய நடிகர்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலராலும் நடிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைக்காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும்.இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது. இனிய சுத...