Shadow

Tag: சோனி சூட்

தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் த...
ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒஸ்தி - மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் "ஓஸ்தி வேலன்" ஆக உள்ளது.நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் இறக்க, மாற்றாந்தகப்பன் மற்றும் அவன் தம்பியுடனுனான உறவில் மேலும் சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்களை நாயகன் எவ்வாறு கலைகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.சந்தானம் இல்லாத தமிழ்ப் படம் நமுத்து போன பஜ்ஜி ஆகி விடும் போல. படத்தின் கலகலப்பிற்கு காரணமாக உள்ளார். வையாபுரி, மயில்சாமி, தம்பி இராமையா என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் மட்டும...