Shadow

Tag: ஜுமான்ஜி

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர். எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது. படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகர...
ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம். பள்ளியில் நான்கு மாணவர்களை 'டெடன்ஷன்' செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள 'ஜுமான்ஜி' எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, 'கர்வி ஜீனியஸ்' என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் ...