Shadow

Tag: தெனாலிராமன்

தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் காட்டுவதைக் குறிப்பிடலாம். இப்படியாக சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இருந்தாலும், மையக்கருவுடன் ஒட்டாமல் திரைக்கதை பயணிக்கிறது. இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் வடிவேலு காட்டும் பரிதவிப்பான உடல்மொழிதான் அவரது பலமே! ஆனால் தெனாலிராமன் மதியூகி என்பதால்.. மிகப் பொறுமையாக எந்த உணர்ச்சியும் ...
ஜகஜ்ஜால வடிவேலு

ஜகஜ்ஜால வடிவேலு

சினிமா, திரைத் துளி
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு. இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது. D.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை இப்போது நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் M.பிரபாகரன் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி தத்ரூபமாக காட்சிகளைப் படமாக்கியுள்ளார். கலைவித்தகர் ஆரூர்தாஸ், சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க ...