Shadow

Tag: நந்தா

கள்ளாட்டம் விமர்சனம்

கள்ளாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாப நோக்கத்தோடு சட்ட விரோதமாக ஆடுவதும்; உண்மையில்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் ஆகும். வில்லனான ஏழுமலை முன்னதையும், அதைத் தோற்கடிக்கும் முயற்சியில் நாயகன் தமிழரசன் பின்னதையும் ஆடுகின்றனர். வெற்றி யாருக்கு என்பதே படத்தின் கதை. ஒரு சிறுமியின் அழகான முகத்தில் இருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தாக்கம் மறையும் முன், ஒரு விபத்தின் மூலமாக படம் வேகம் எடுக்கிறது. சிறுமியின் தந்தையான மகேந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. திக்கற்று கதி கலங்கிப் போயிருக்கும் மகேந்திரனுக்கு அக்கறையோடு உதவுகிறார் இன்ஸ்பெக்டர் தமிழரசன். உதவ வந்த இன்ஸ்பெக்டருக்கு அதனால் இக்கட்டு நேருகிறது. மகேந்திரனாக ரிச்சர்ட்டும், தமிழரசனாக நந்தாவும் நடித்துள்ளனர். கள்ளாட்டம் ஆடும் நந்தா தான் படத்தின் நாயகன். நந்தா காட்டும் விறைப்பும் தீவிரமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையையும் மனநிலையையும் கச்சி...
அதிபர் விமர்சனம்

அதிபர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக...