Shadow

Tag: பஸ் 657

பஸ் 657 விமர்சனம்

பஸ் 657 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தன் மகளின் மருத்துவச் சிகிச்சைக்காக, தான் வேலை செய்த கேசினோவை ஜேசன் காக்ஸுடன் இணைந்து கொள்ளையடிக்கிறார் லூக் வான். கொள்ளையடித்து விட்டு ஓடும்போது, தப்பிப்பதற்காக பேருந்தொன்றில் ஏறுகின்றனர். ரோந்துப் பணியில் இருக்கும் க்றிஸியா எனும் காவல்துறை அதிகாரி சந்தேகத்தோடு அப்பேருந்தைத் தொடருவதால், லூக் வான் குழு வேறு வழியின்றி பேருந்தைக் கடத்துகின்றனர். மொத்த காவல்துறையும் அப்பேருந்தை பின் தொடர்கிறது. இச்சிக்கலில் இருந்து லூக் வான் எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. எந்தப் புதுமையும் இல்லாத கதை. நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை. சில கொள்கைகளோடு வாழ்பவர் ஃப்ரான்சிஸ் சில்வியா போப். ‘எவரையும் திருட அனுமதிக்கக் கூடாது’ என்பது அதில் மிக முக்கியமானது. தொழிலின் பலமே அதில் தான் உள்ளதென உளமாற நம்புபவர். எவரேனும் அப்படித் திருடினால், திருடனையோ - திருடர்களையோ கண்டுபிடித்துச் சலனமேதுமின்றி க...
கடத்தப்படும் பஸ் 657.!

கடத்தப்படும் பஸ் 657.!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்தைக் கடத்தினால் என்ன நடக்கும் என்பதை ஸ்பீட் (Speed) மற்றும் ஸ்பீட் – 2 (Speed - 2) படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தைக் கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான் பஸ் 657 படத்தின் சாரம். மிகச் சிறந்த கிளாஸிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி டார்னமென்ட் (The Tournament) என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மான், இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டீஃபன் சைரஸ் செஃபர் மற்றும் மேக்ஸ் ஆடம்ஸ், இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர். மனைவியை இழந்த சூழலில், தனது ஒரே மகளை வளர்த்திட அரும்பாடு படுகிறார் லூக் வான். நோய்வாய்பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது லூக்கி...