Shadow

Tag: பாடகர் மனோ

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஷங்கர் எனும் முரட்டு சிங்கிளிற்கும், சிம்ரன் எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் செயலிக்குமான ரிலேஷன்ஷிப்பைப் பற்றிப் பேசுகிறது படம். அத்தகைய பந்தம் எங்கு போய் முடியும் என்பதே படத்தின் கதை. எந்திரன் படத்தில், சிட்டி ரோபாவிற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வரும், இங்கே மிர்ச்சி ஷிவா மீது உருவமற்ற செயலியான சிம்ரனிற்குக் காதல் வருகிறது. சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் (App) பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச...