பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. தணிக்கை கெடுபிடிகளுக்காக, தலைப்பில், பெண் என்பது 'பென்'னாக மாறியுள்ளது.
ப்ளே பாயாக சுற்றித் திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பார்ப்பான். இல்லையெனில், எடுத்தவற்றை விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருப்பர். அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவ்வழக்கினைப் போலீசார் துப்புத் துலக்கத் தொடங்குகிறார்கள்.
அரவிந்த், அடுத்து நந்தினி எனும் பெண்ணைக் காதலிக்க, இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள்...