Shadow

Tag: பெரு துளசி பழனிவேல்

‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் "அந்த நாள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார்.கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், "அந்த நாள்" படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவி.எம்.சரவணன், இயக்குநர் S.P.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்....
தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

சினிமா, புத்தகம்
தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, 'தமிழ் சினிமாவின் முதல்வர்கள்' என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், தமிழ்ப்படங்களையும் பிரிக்கவே முடியாதோ என்று கதி கலங்கும்படி, வசவசவெனக் காதல் படங்களை உருவாக்கித் தள்ளுகின்றது தமிழ்த் திரைப்பட உலகம். அலுக்கவே அலுக்காமல் தமிழ்த் திரையுலகம் காதல் படங்களை எடுப்பதும், எங்களுக்குச் சலிக்கவே சலிக்காதெனப் பார்வையாளர்கள் அவற்றைக் கொண்டாடுவதும் ஒரு தொடர் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, த...
இதுதான் காதலா – புதிய பாணி விஞ்ஞான காதல் கதை

இதுதான் காதலா – புதிய பாணி விஞ்ஞான காதல் கதை

சினிமா, திரைத் துளி
குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் “இதுதான் காதலா”. இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் இதில் விஞ்ஞான மனிதனாக இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்திக் காதலையும் கணினியும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து “இதுதான் காதலா” படத்தைத் தயாரித்து வருகிறார்கள். இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குநர் ராஜசிம்மன், காதல் சுகுமார், கூல் சுரேஷ், பாலு ஆனந்த், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். >> தயாரிப்பு - வி.எஸ்.முருகன் >> ஒள...
வன்முறைப்பகுதி விமர்சனம்

வன்முறைப்பகுதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது. வீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது. மேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடும...
என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி அலையும் சாதிச் செருக்குள்ள தந்தை, ஒரு கட்டத்தில் தன் மகளைப் பெற்றதற்கு, 'என்ன தவம் செய்தேனோ!' என உணருவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. இயக்குநர் பேரரசின் உதவியாளரான முரபாசெலன் இப்படத்தை இயக்கியுள்ளார். 'மாயிலைத் தோரணம்' எனப் பெயர் சூட்டப்பட்டு சென்சார் செர்ட்டிஃபிகேட் வாங்கியுள்ளனர். சுப நிகழ்வுகளுக்குக் கட்டப்படுபவை மாயிலைத் தோரணங்கள். அப்படியொரு சுப நிகழ்வை நோக்கித்தான் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகிறது. ஆனால், படத்தில் தொடர் 'ட்விஸ்ட்'களைத் தொடக்கம் முதலே அளித்துக் கொண்டு வருகிறார் இயக்குநர். க்ளைமேக்ஸிலும் அதைத் தொடர்கிறார். "பாக்கியம்மாஆ" எனத் தன் மகளை அன்போடு வாரி அணைக்கும் ஒரு தந்தையால் எப்படித் தன் மகளைக் கொல்ல வெறியோடு அலைய முடிகிறது? சாதிப் பெருமிதம் என்ற முட்டாள்த்தனம் ரத்தப்பாசத்தையும் விடக் கனமானதா என்ன? ஆனால், ஏனோ படம்...