Shadow

Tag: பொன்னியின் செல்வன் திரைப்படம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத்ன...
லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு

சினிமா, திரைத் துளி
லைகா நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் டீஸர் வெளியீடு ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாகச் சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம் தெரிய வருகிறது. 'பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரசிகர்களிடம் இது போன்ற வரலாற்றுக் கதைகள் தமிழ் மொழியில் வெளியாகாதா என்ற எண்ணம் ஏற்பட்டது. அதிலும் அமரர் கல்கி உலகம் போற்றும் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்றை உரிய திருவாலங்காடு செப்பேடுகளின் ஆதாரங்களுடன் 'பொன்னியின் செல்வன்' என்ற நாவலாகப் படைத்திருக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரித்து, அதனை சர்வதேச அளவிலான...