பொன்னியின் செல்வன் – நாடக அனுபவம்
மு.கு.: மேஜிக் லேண்டர்ன் தியேட்டரும், எஸ்.எஸ். இண்டர்நேஷ்னலும் இணைந்து நிகழ்த்தும் அற்புதமான 3½ மணி நேர ‘பொன்னியின் செல்வன்’ நாடகம், இன்று 25வது முறையாக (2014 – 2015) மேடையேற்றப்படுகிறது
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு பெரும் சரித்திரப் புதினத்தை மூன்றரை மணி நேரத்திற்குச் சுருக்கி, அதனை மிக நேர்த்தியான நாடகமாக உருமாற்றியுள்ளனர். அரங்கை நிர்மாணித்த R.K.ஜெயவேலுவும், கலை இயக்குநர் தோட்டா தரணியும், உடைகளை வடிவமைத்து குந்தவையாகவும் நடித்த பிரீத்தி ஆர்த்ரேயாவும், மனோரதத்தில் நாம் பார்த்த சோழப் பேரரசுக்கு பங்கம் விளைவிக்காமல் கண் முன் கொண்டு வந்துள்ளனர். பூங்குழலியின் காதலர்களான கொள்ளிவாய்ப் பிசாசுகளையும்கூட மேடையேற்றி இருந்தனர். அதே போல், T.பாலசரவணனின் ஒளியமைப்பு நாடகத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. உதாரணம், கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு வந்தியதேவனும் பூங்குழலி...