Shadow

Tag: மஞ்சிமா மோகன்

துக்ளக் தர்பார் விமர்சனம்

துக்ளக் தர்பார் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை. கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்தி...
விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்

விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்

சினிமா, திரைத் துளி
அடங்கமறு வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ திரைப்படம் மூலம் தயாரிப்பில் தடம் பதிக்கிறார். நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குநர், நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ஜீவா, நீர்ப்பறவை, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ராட்சசன் உள்ளிட்ட...
தேவராட்டம் விமர்சனம்

தேவராட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போல் தேவராட்டம் என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று. ஆனால் அத்தகைய கலைக்கும் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்பதாலும், படத்தில் வானுலக மனிதர்கள் இல்லாததாலும், படத்தின் தலைப்பிற்கு நேரடியாக ஒரே பொருளைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. தொழிலுக்காகக் கொலை செய்பவரையும், கொலையைத் தொழிலாகச் செய்பவரையும் பகைத்துக் கொள்கிறார் வெற்றி. அவர்கள் இவரை வெட்டப் பார்க்க, காவற்கார வம்சத்தைத் சேர்ந்த இவர் அனைவரையும் வெளுக்க, படம் முழுவதும் ஒரே வெட்டாட்டம் தான். கடைக்குட்டி சிங்கம் படம் இயக்குநரை ரொம்பப் பாதிச்சிருக்கும் போல, நாயகனுக்கு ஆறு அக்காக்கள். போஸ் வெங்கட், ஆறுபாலா, சூரி, முனீஷ் ராஜா முதலியவர்கள் அக்கா கணவர்களாக நடித்துள்ளனர். மூத்த அக்கா, மாமாவாகப் போஸ் வெங்கட்டும், வினோதினி வைத்தியநாதனும் குணச்சித்திரப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர். நாயகனுடன் நெருக்க...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஓர் ஓராள் படை (ஒன்-மேன் ஆர்மி). இப்படைக்கு வீரமோ, பலமோ குறிப்பிடும்படி இல்லை. ஆனால், சாதுரியமாகவும் துரிதமாகவும் செயல்படக் கூடிய அறிவே படையின் ஒரே ஆயுதம். அதைக் கொண்டு, 'சோட்டா ராஜ்' எனும் பயங்கரவாதியின் சதித் திட்டத்தை நாயகன் எப்படி முறியடிக்கிறான் என்பதே படத்தின் கதை. மூன்று வருடங்களுக்கு ஒரு படமென்ற ரீதியில் வந்துள்ள இயக்குநர் கெளரவ் நாராயணனின் மூன்றாவது படம். நேர்த்தியான திரைக்கதையால் படத்தைச் சுவாரசியப்படுத்துள்ளார். அதையும் மீறி, படத்தில் இவரது வெற்றி என்பது, பரோட்டா சூரியின்  ஒரே மாதிரியான, பார்ப்பவர்களை  இம்சிக்கும் நடிப்பை முடிந்த அளவு மாற்றி, சூரியையும் ரசிக்கும்படி திரையில் காட்டியிருப்பதைத்தான் சொல்ல வேண்டும். காமெடியனாக அவரது பாத்திரத்தை மட்டுபடுத்தி இருந்தாலும், நல்லதொரு துணை நடிகராக அவரை உபயோகப்படுத்தி இருப்பது சிறப்பு. இப்படத்தில் எந்த வேடத்தை யார் ஏற்றிருந்த...
லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

லைகா புரொடக்ஷன்ஸின் 9வது படம்

சினிமா, திரைத் துளி
படத்திற்குப் படம் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்தெடுத்து இயக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மஞ்சிமா மோகன் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களைத் தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது. இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் பாடலின் படப்பிடிப்பிற்காக ஓமன் நாட்டிற்குப் படக்குழுவினர் சென்றது குறிப்பிடத்தக்கது....
அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?' என்ற கேள்விக்கு, "இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்" எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், "ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்" என்றும் தன் விருப்பத்தை வலியுறுத்தினார். எஸ்.டி.ஆர். மஞ்சிமா மோகனைக் காதலிக்கிறார். மஞ்சிமாவின் குடும்பத்தை ஒரு பெரும் பிரச்சனை சூழ்கிறது. காதலுக்காகவும், காதலிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை. "முதல் பாதி ரொமான்ட்டிக்காக இருக்கும்; இரண்டாம் பாதியில் மாஸ் விஷயம்னு சொல்வாங்க...