தங்கலான் | படக்குழுவினர்க்கு தடபுடல் விருந்தளித்தார் விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது தங்கலான் திரைப்படம். சியான் விக்ரம் போன்ற ஒரு நட்சத்திர நடிகரின் அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை அனைவரும் வியந்து பார்த்து ரசித்துப் பாராட்டுகிறார்கள். இந்தத் தருணத்தில் சியான் விக்ரம் 'தங்கலான்' படத்தின் வெற்றிக்காகப் படத்தில் கடினமாகப் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சியான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்...