வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம்.
‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான பாலசண்முகம்.
காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன். அவனுக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர பாண்டியன் இருக்க, இளையவன் வீர பாண்டியனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்குப் போகிறது. அந்த சதித் திட்டங்களை எல்...