Shadow

Tag: மாளவிகா மோகனன்

தங்கலான் விமர்சனம்

தங்கலான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சார்பட்டா பரம்பரையின் வெற்றியைத் தொடர்ந்து எழுத்தாளர் தமிழ் பிரபாவும், பா. ரஞ்சித்தும் இணையும் படமென்பதால் எதிர்பார்ப்பு கூடுதலாகவே பார்வையாளர்களிடம் நிலவியது. 'மாய எதார்த்தம் (Magical Realism)' வகைமையைச் சேர்ந்த படம் என இசை வெளியீட்டின் போது, எதிர்பார்ப்பில் எண்ணெயை ஊற்றினார் தமிழ் பிரபா. அத்தனைக்கும் ஆசைப்படு என்கிற ஜக்கி வாசுதேவின் புத்தகத் தலைப்புதான், தங்கலான் படத்தின் மையச்சரடு. நாடாளும் மன்னன், ஆங்கிலப் பேரரசின் அதிகாரி, எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அத்தனை பேரும் தங்கத்திற்கு ஆசைப்படுகின்றனர். நாயகனோ நிலத்திற்கு ஆசைப்படுகிறான். தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியல...
“ரஞ்சித்தின் ஆர்மியில் நானொரு சோல்ஜர்” – பார்வதி திருவோத்து

“ரஞ்சித்தின் ஆர்மியில் நானொரு சோல்ஜர்” – பார்வதி திருவோத்து

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகை பார்வதி, '' நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை. ஜி. வி. பிரகாஷ் இந்தப் படத்திற்காக வழங்கிய இசை, ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், மிகப் பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்தப் படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு ...
பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான்

பழங்குடிப் பெண்ணாக மாளவிகா மோகனன் | தங்கலான்

சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது.சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான "பியாண்ட் தி க்ளவுட்ஸ்", படத்திலேயே மிகக் கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா. ரஞ்சித்துடன் இணைந்து பணி...
மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’

மாளவிகா மோகனனின் ‘கிறிஸ்டி’

Movie Posters, அயல் சினிமா, கேலரி
'பேட்ட', 'மாஸ்டர்' படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கிறிஸ்டி' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கிறிஸ்டி'. இப்படத்தின் திரைக்கதையைப் பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி.ஆர்.இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ஆனந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா...