Shadow

Tag: மியா ஜார்ஜ்

கோப்ரா | கொச்சியில் கொண்டாட்டம்

கோப்ரா | கொச்சியில் கொண்டாட்டம்

சினிமா, திரைச் செய்தி
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாளத் தேசத்தின் மாநகரமான கொச்சிக்குச் சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'கோப்ரா' திரைப்படத்தைத் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை ...
ரம் விமர்சனம்

ரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அநிருத் இசையமைத்த 13வது படமான ‘ரம்’, ஒரு பேய்ப்படம் என்பது ஒரு சுவாரசியமான ஒற்றுமை. பேய்ப்படங்கள் பார்ப்பதையே தவிர்க்க விரும்பும் அநிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட ஒரு குடும்பம், பேய்களாக மாறிக் கொன்றவர்களைப் பழி தீர்க்கிறது. வேலை இல்லா பட்டதாரி படத்தில், தனுஷின் தம்பியாக நடித்த ஹ்ரிஷிகேஷ் (H சைலன்ட் என்பதால் ரிஷிகேஷ் என்றே திரையில் பெயர் வருகிறது) தான் இப்படத்தின் நாயகன். அநிருதின் கஸினும் கூட. படத்தின் நாயகன் என்றாலும், பேய்ப்படத்தில் ‘சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ பேய் தானே! ஆகையால், அவர்க்கு அழுத்தமான அறிமுகமாக இப்படம் அமையவில்லை என்றே தோன்றுகிறது. பேயிடம் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அவரும் ஒருவர் என்ற அளவில் மனதில் ஒட்டாமல் போய்விடுகிறார். ‘இவன் முகத்தில ஒரு ரியாக்ஷனும் காட்ட மாட்டான். இவன் கோபப்படுறானா வருத்தப்படுறானான்னே தெரில’ என விவ...
வெற்றிவேல் விமர்சனம்

வெற்றிவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன், பிரம்மன் என நண்பர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர், வெற்றிவேலாக மாறி, தன் தம்பியின் காதலுக்காக எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் கதை. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசுவும், நாட்டுச்சாலை பிரசிடெண்ட்டாக நடித்திருக்கும் பிரபுவும் தான் கதையின் நாயகர்கள். ஆனால், படத்திற்கு உயிரூட்டியுள்ளதோ விஜி சந்திரசேகர் மட்டும்தான். ‘நாங்க இருக்கும் வரை காதல் சாகாது’ என நாடோடிகள் குழு விஜய் வசந்த், பரணி ஆகியோருடன் சமுத்திரக்கனியும் இறங்கி அதகளப்படுத்துகிறார். படத்தின் பலம் அதன் துணை நடிகர்கள் என்றே சொல்லவேண்டும். சசிகுமாரின் தம்பியாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். நாயகனின் அறிமுகத்தை விட இவரது அறிமுகம் நன்றாக இருப்பதோடு, கதையோடும் பொருந்தியும் வருகிறது. சசிகுமாரின் நடனம் ப்பாஆஆ..! மலையாளி ஜனனியாக மியா ஜார்ஜ். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிகிலா விமலுக்கு வழிவிட்ட...