Shadow

Tag: யாதுமாகி

இலக்கியமும் இலக்கிய நிமித்தமும்

இலக்கியமும் இலக்கிய நிமித்தமும்

கட்டுரை
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறையும், பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து இலக்கிய மாநாடு – யாதுமாகி 2015 எனும் இலக்கிய நிகழ்வை ஃபிப்ரவரி 12, 13 தேதிகளில் நடத்தினார்கள். பாரதி இலக்கியச் சங்கத்தை சிவகாசியில் நிறுவிய கவிஞர் திலகபாமா அவர்களின் முயற்சியில்தான் எழுத்தாளர்களும் மாணவர்களும் நேரடியாகச் சந்திக்கும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. எது குறித்து மாணவர்களிடம் பகிரப்பட வேண்டுமென எழுத்தாளர்களே தீர்மானித்ததாகச் சொன்ன திலகபாமா, “இன்றைக்கு, இலக்கியம் படைச்சு என்னத்த கிழிச்சீங்க என்ற கேள்வி பரவலாக நம் முன் வைக்கப்படுகிறது. இலக்கியம், வாழ்வியலை நோக்கி நகர்த்துகிறது; அனைத்து மக்களின் அரசியலையும் பேசுகிறது; மனிதர்களுக்கிடையே நிகழும் நுண்ணரசியலை ஆராய்கிறது. அதை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவே இந்நிகழ்வு” என்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்பொழுது, “இது போன்ற நிகழ்வுகளில், வந்...