Shadow

Tag: யாஷிகா ஆனந்த்

கடமையை செய் விமர்சனம்

கடமையை செய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'முத்தின கத்திரிக்கா' படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை. மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் மு...
ஜாம்பி விமர்சனம்

ஜாம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது. பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் தொன்மையான முறையில் அறிமுகம் செய்கின்றனர். அங்கிருந்து டாஸ்மாக். டாஸ்மாக்கில் இருந்து மரக்காணத்தில் ஒரு லாட்ஜ். மட்டையாகி அக்கதாபாத்திரங்கள் விழித்தால் சுற்றிலும் வாயில் ரத்தம் வடிய சுற்றிக் கொண்டிருக்கும் ஜாம்பிகள். ஆனால், இந்தக் கட்டத்திற்குள் வருவதற்குள் ஒருவழியாக்கி விட...