Shadow

Tag: ரம்யா பாண்டியன்

ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, "தீதும் நன்றும் கற்றுத் தருவோம்"என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, "என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!" எனக் கதவை டமாலென மூடுகிறார். நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள...